சினிமா

“எனக்கு கொரோனா பாசிட்டிவ்; நான் நலமாக இருக்கிறேன்” - வீடியோ வெளியிட்ட எஸ்பிபி

“எனக்கு கொரோனா பாசிட்டிவ்; நான் நலமாக இருக்கிறேன்” - வீடியோ வெளியிட்ட எஸ்பிபி

webteam

தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாகவும் ஆனால் தான் நலமாக இருப்பதாகவும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “எனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மிகவும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் நான் மருத்துவமனையிலேயே அனுமதி ஆகியுள்ளேன். சளி, காய்ச்சலை தவிர மற்றபடி நான் நன்றாக உள்ளேன்.

நான் ஓய்வு எடுப்பதால் நிறைய கால்கள் எடுக்கமுடியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.