சினிமா

’கொய்யால’ன்னு பாட்டு எழுதுறாங்க: ஆர்.வி.உதயகுமார் வேதனை

’கொய்யால’ன்னு பாட்டு எழுதுறாங்க: ஆர்.வி.உதயகுமார் வேதனை

webteam

பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ’சகுந்தலாவின் காதலன்’. பானு ஹீரோயின். கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராசாமதி. வசனம், ஆ.வெண்ணிலா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘தமிழ்நாட்டை சினிமாகாரர்கள் தான் அதிகம் ஆண்டார்கள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமாகாரர்களை வரி போட்டு வதைக்காதீர்கள். அதே போல் தியேட்டர் அதிபர்களும் பார்கிங் மற்றும்
தின்பண்டங்களுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். எம்ஜி.ஆர் காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது கொய்யால என பாடல் எழுதுகிறார்கள், ஆபாச வரிகள் வருகிறது. உங்கள் பேரன், கொய்யால பாடலை எழுதியவர் எங்கள் தாத்தாதான் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கேவலம். ’வானத்தை போல மனம் படைத்த மன்னவனே’ என்ற பாடலை நான் எழுதினேன், வானத்தை போல என்ற தலைப்பை வைத்தார். இயக்குனர் விக்ரமன். இப்போதுள்ள பாடல்களை தலைப்பாக வைக்க முடியுமா?’ என்றார்.