சினிமா

10 நாள்களில் ரூ.700 கோடி: கலக்குது டன்கிர்க்

webteam

ஹாலிவுட் படமான, ’டன்கிர்க்’ இரண்டாவது வாரமாக பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட், த டார்க் நைட் ரைசஸ், இன்செப்சன், இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் எடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள படம், ’டன்கிர்க்’. இந்தப்படம், இரண்டாம் உலகப் போர்ப் பின்னணியைக் கொண்டது. பிரான்ஸின் டன்கர்க் கடற்கரைப் பகுதியில் தவித்த சுமார் 4 லட்சம் பிரிட்டிஷ் ராணுவ வீர‌ர்களை பொதுமக்கள் மீட்ட வரலாற்றுக் கதை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியான நாளில் இருந்தே உலகம் முழுவதும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை சுமார் 700 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான "THE EMOJI MOVIE" என்ற அனிமேஷன் திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. "GIRLS TRIP" திரைப்படம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.