சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 5 ஸ்கிரீன் களில் வெளியிடப்படும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய புரோமோஷன் நிகழ்ச்சி சென்னை ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.ராஜமௌலி மகதீரா வெளியானபோது, தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பிரபலமான பெரிய திரையில் தன்னுடைய படம் வெளியாக வேண்டுமென ஆசைப்பட்டார், அது அப்போது நடைபெற்றது. அதேபோல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை 3 தமிழக ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் நான் உறுதியாக கூறுகிறேன், சத்தியம் திரையரங்கில் உள்ள ஆறு ஸ்கிரீன்களில் ஐந்து ஸ்கிரீன்களில் ஆர் ஆர் ஆர் திரையிடப்படும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார். இதைக் கேட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், 2022 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்குகிறது முதல் மாதத்திலேயே ஆர் ஆர் ஆர் மற்றும் அஜித் நடித்துள்ள வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன, இது சிறப்பான ஆண்டாக அமையும் என தெரிவித்தார்.