ராஜமெளலி இயக்கும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஹீரோயினாக நடிக்கும் ஆலியா பட்டின் சீதா கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
’மஹதீரா, நான் ஈ, பாகுபலி படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி பட ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி இந்தியா மட்டுமல்லாது உலகளவில் வசூல் சாதனை செய்தது. உலக இயக்குநர்களுக்கே தொழில்நுட்பத்தில் சவாலாய் அமைந்தது பாகுபலி.இவரது அடுத்தப்படமான ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள்.
ஏற்கெனவே, ராஜமெளலி மூன்று படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றியுள்ளார். ராம் சரணுடன் ’மஹதீரா’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிடோர் நடித்து வருகிறார்கள். படம் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்நிலையில், இன்று நடிகை ஆலியா பட் தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி, ’ஆர்ஆர்ஆர்’படக்குழு ஆலியா பட் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கும் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.