சினிமா

அஜித்துடன் இணையும் ரோபோ சங்கர்!

அஜித்துடன் இணையும் ரோபோ சங்கர்!

webteam

!

நடிகர் அஜித்குமாருடன் ரோபோ சங்கர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  
இயக்குநர் சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் படம் ‘விசுவாசம்’. ஏற்கெனவே ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ என தொடர்ந்து அஜித்துடன் இணைந்திருக்கிறார் சிவா. எனவே இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரோபோ சங்கர் காமெடியனாக ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார். இந்தச் செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இவர்கள் இச்செய்தி குறித்த தகவல்களை ட்விட்டரில் பரபரப்பாக பரவ செய்து வருகின்றனர். அதனால் ரோபோ சங்கர் ட்விட்டரில் ட்ரெண்ட்  ஆகியிருக்கிறார்.