சினிமா

போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்: ரோபோ சங்கர் புகார்

போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்: ரோபோ சங்கர் புகார்

Rasus

ட்விட்டரில் தன் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதாக நடிகர் ரோபோ சங்கர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவத்தில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து போலி கணக்கில் பதிவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோல பலமுறை நடந்துள்ளதால் தான் மன உளைச்சலுக்கு ‌ஆளாகியுள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க‌வேண்டும் என ரோபோ சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.