ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவான ரீமேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
2018-ல் ஜோஜு ஜார்ஜ், மாளவிகா மேனன் நடிப்பில், பத்மகுமார் இயக்கிய வெளியான மலையாளப் படம் ‘ஜோஷப்’. இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார்.
இந்த நிலையில் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் பாலா. அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார். தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். 'விசித்திரன்' என பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடல் எடையை 22 கிலோ அதிகரித்திருந்தார்.