சினிமா

இன்று நள்ளிரவு வெளியாகும் ஜீவா பட டைட்டில்

இன்று நள்ளிரவு வெளியாகும் ஜீவா பட டைட்டில்

webteam

நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கான தலைப்பு இன்று நள்ளிரவு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜீவா தற்சமயம் ‘கொரிலா’ படத்தில் பிசியாக இருக்கிறார். அவரது கதை தேர்வு ஒரு காலத்தில் மிகவும் பேசப்பட்டது. ஆனால் சமீப காலமாக அவரது சினிமா கிராஃப் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்த ஒரு நடிகர் காலப்போக்கில் தன் மார்க்கெட்டை தவறவிட்டது பற்றி சினிமா வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் ராஜீவ் முருகன் இயக்கும் புதிய படத்தில் ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான டைட்டில் இன்று இரவு 12.01க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அநேகமாக இந்தப் படத்தின் தலைப்பு ‘ஜிப்சி’ என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதனை உறுதி செய்ய இரவு வரை காத்திருக்க வேண்டும் நடிகர் ஜீவாவின் ரசிகர்கள்.