சினிமா

வைரலாகும் பிரியா வாரியரின் முத்தக்காட்சி

வைரலாகும் பிரியா வாரியரின் முத்தக்காட்சி

rajakannan

‘ஒரு அடார் லவ்’ படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இன்று காதலர் தினம். காதலித்தாலும், காதலிக்கா விட்டாலும் இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான காதல் பற்றிய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். காதலர் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே காதல் பற்றிய பேச்சும் பரவலாக இளைஞர்களிடம் இருக்கும். மலையாள திரையுலகின் ‘ஒரு அடார் லவ்’ படக்குழுவினர் காதலர் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு அசை போட ஒரு அழகான பாடலை கொடுத்துள்ளனர் என்றே தோன்றுகிறது. 

‘மாணிக்ய மலராய பூவி’ என்ற அந்த இளைமை ததும்பும் பாடலை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தப் பாடல் எடுக்கப்பட்டுள்ளதே மிகவும் அழகானதாக உள்ளது. குறிப்பாக, நடிகை பிரியா வாரியர் புருவத்தை உயர்த்தி, சொல்லும் காதல் காட்சி இணையதளங்களில் வைரலானது. ஒரே இரவில் லட்சக்கணக்கானோர் இந்தப் பாடலை பார்ப்பதற்கு பிரியா வாரியர் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இன்றளவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களையும் அவர் கொள்ளையடித்துள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வந்தது.

 ‘மாணிக்ய மலராய பூவி’ பாடலின் அலை அடித்து ஓய்வதற்குள் தற்போது, ‘ஒரு அடார் லவ்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீஸரில் பிரியா வாரியர் முத்தம் கொடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது இரண்டு விரல்களில் முத்தமிட்டு இரு கண் ஷாட் போல் சக பள்ளி மாணவர் மீது சுடுகிறார். அதில் அந்த மாணவர் அருகில் உள்ள மாணவர் மீது வெட்கத்துடன் சரிந்து விழுகிறார். 44 நொடிகள் மட்டும் உள்ள இந்த டீஸர் வெளியாகி ஒரு நாள் முடிவதற்குள் 28 லட்சம் பேர் யூடியூபில் பார்த்துள்ளனர். 

முதலில் படத்தில் பிரியா வாரியருக்கு சிறிய ரோல்தான் இருந்தது. பின்னர் அவரது நடிப்பையும், அவருக்கு கிடைத்த வரவேற்பையும் அடுத்து இயக்குநர் ஒமர் லுலு முக்கிய காதாபாத்திரம் கொடுத்துள்ளார்.