சினிமா

'மெர்சல்' தலைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

'மெர்சல்' தலைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

rajakannan

மெர்சல் பட தலைப்புக்கு எதிராக படத் தயாரிப்பாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நடிகர் விஜயின் படம் மெர்சல் என்ற தலைப்பில் வெளியாக தடையில்லை என்று தெரிவித்தனர்.

இருப்பினும், மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரிய அனுமதி கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், மெர்சல் திரைப்படத்தை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையங்குகளில் வெளியிட தடைகோரி, பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு, தீபாவளிக்கு பின் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.