ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல், குல்புஷன் உட்பட பலர் நடித்து, 1982-ல் வெளியான இந்தி படம், ’அர்த்’. மகேஷ் பட் இயக்கியிருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. நடிகை பர்வீன் பாபிக்கும் இயக்குனர் மகேஷ் பட்டுக்குமான காதலை சொல்லும் கதையான இதில் நடித்ததற்காக, ஷபனா ஆஸ்மிக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்தப் படத்தைதான் தமிழில் ’மறுபடியும்’ என ரீமேக் செய்தார் பாலுமகேந்திரா. இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை ரேவதி இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பாலுமகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தில் நடித்திருந்தேன். இப்போது இந்த படத்தை இயக்குகிறேன். இந்த வாய்ப்பு வந்தபோது உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. மகேஷ் பட் என்னிடம் பேசி சம்மதிக்க வைத்ததால் சரி என்றேன். இது ரீமேக் படமாக இருக்காது. கதையை நவீன காலத்துக்கு ஏற்ப மாற்ற இருக்கிறோம்’ என்றார்.