அல்லு அர்ஜுன் - ரேவந்த் ரெட்டி புதிய தலைமுறை
சினிமா

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீச்சு விவகாரம்: தெலங்கானா முதல்வர் கண்டனம்

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

PT WEB

ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுனின் வீட்டில் கற்களை வீசி உஸ்மானியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். வீட்டில் அத்துமீறி நுழைந்த அவர்கள், அங்கிருந்த பூந்தொட்டிகளை போட்டுடைத்தனர்.

அப்போது புஷ்பா-2 படம் பார்க்கச்சென்று உயிரிழந்த ரசிகை ரேவதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் - ரேவந்த் ரெட்டி

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபி மற்றும் மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் மெத்தன போக்கை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.