சினிமா

பிறந்த நாள் வாழ்த்துடன் வெளியானது ’சாணிக் காயிதம்’ படத்தின் மூன்றாவது போஸ்டர்

webteam

செல்வராகவன் பிறந்தநாளையொட்டி அவர் ஹீரோவாக நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் செல்வராகவன் முதன்முறையாக நடிக்கும் “சாணிக் காயிதம்” படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்தப்படத்தில் இருந்து மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

செல்வராகவனின் பிறந்த தினமான இன்று இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டரில், செல்வராகவன் ஒருகையில் துப்பாக்கியுடனும், மற்றொரு கையில் புகைப்பிடித்துக் கொண்டும் இருக்கிறார். அவரின் முன்பு, கால் கட்டப்பட்ட சடலம் ஒன்று இருக்கிறது. இந்தப்படத்திற்கு பெண் ஒளிப்பதிவாளரான யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். பரியேறும் படத்தில் கலைஇயக்குனராக பணியாற்றிய ராமு தனகராஜ் இதில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் செல்வராகவனும், கீர்த்தி சுரேஷூம் கலந்துகொண்டனர்.

முன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதலுக்கு சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் பேசியபோது “ தயக்கத்துடனே செல்வராகவனிடம் இந்தக் கதையை கூறினேன். ஆனால் முழுக்கதையை கூறிய உடனே அவர் நடிக்க ஒத்துக்கொண்டார்” என்றார்.