சினிமா

செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக் காயிதம்‘ போஸ்டர்... ட்விட்டரில் வெளியிட்ட தனுஷ்

செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக் காயிதம்‘ போஸ்டர்... ட்விட்டரில் வெளியிட்ட தனுஷ்

webteam

நடிகர் செல்வராகவன் முதன்முறையாக நடிக்கும்  “சாணிக் காயிதம்” படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகர் செல்வராகவன் முதன்முறையாக நடிக்கும் “சாணிக் காயிதம்” என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது அப்படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரை நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு பெண் ஒளிப்பதிவாளாரான யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். பரியேறும் படத்தில் கலைஇயக்குனராக பணியாற்றிய ராமு தனகராஜ் இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதலுக்கு சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் பேசியபோது “ தயக்கத்துடனே செல்வராகவனிடம்  இந்தக் கதையை கூறினேன். ஆனால் முழுக்கதையை கூறிய உடனே அவர் நடிக்க ஒத்துக்கொண்டார்” என்றார்.