தமிழில் சம்பளம் அதிகம் என்பதால் கன்னட படங்களைப் புறக்கணிப்பதாக ரெஜினா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ரெஜினா பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தமிழ் நாட்டில்தான். சென்னை அண்ணா நகரில்தான் அவருக்கு வீடு. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மூலம் தமிழ் சினிமாவில் வலது காலை எடுத்து வைத்தவர் இவர். தமிழில் அதிகமான வாய்ப்புக்கள் இல்லாததால் கன்னடம் பக்கம் போனார். அங்கே மோஸ்ட் வாண்டெட் ஹீரோயினாக வலம் வந்தார். தமிழில் மிக கண்ணியமான உடைகளை உடுத்திய ரெஜினா கன்னட சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் படுகிளாமராக உடைகளை அணிந்து வலம் வந்தார். அதனால் அவரது மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. பாலிவுட் அளவுக்கு பட வாய்ப்பு இவரை நாடி வந்தது.
இந்நிலையில் இவர் அதிக சம்பளத்திற்காக தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என கன்னட பத்திரிகைகள் புகார் வாசிக்க தொடங்கின. அது ரெஜினாவின் காது வரை சென்றது. இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் விரைவில் நடிக்க உள்ள கன்னட படம் குறித்த ஒப்பந்தத்தை வெளியிட்டு மறுத்திருக்கிறார்.