சினிமா

மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி? லோகேஷ் இயக்கத்தில் அல்ல; கமல் கொடுத்த அப்டேட்!

மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி? லோகேஷ் இயக்கத்தில் அல்ல; கமல் கொடுத்த அப்டேட்!

JananiGovindhan

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அவரது அடுத்த பட அப்டேட் குறித்து கமலே தெரிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு லோகேஷ் இயக்கத்திலான விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசன் திரையில் தோன்றியிருக்கிறார். திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை திரையரங்கை நோக்கி ரசிகர்கள் படையெடுத்து வருவதை வைத்தே அறியலாம்.

இப்படி இருக்கையில், கமலின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை அவரே கூறியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை பற்றி தெரிவித்திருக்கிறார்.

அதில், ஃபகத் பாசிலை வைத்து டேக் ஆஃப், சி யு சூன், மாலிக் ஆகிய படங்களை மலையாளத்தில் இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்த மகேஷ் நாராயணன்தான் கமல் நடிப்பில் உருவான விஸ்வரூபம் படங்களின் இரண்டு பாகத்திற்கும் எடிட்டராக பணியாற்றியிருந்தார்.

மேலும், அரசியல் களம் சார்ந்த கதையாக கமல்-மகேஷ் நாரயணன் படம் இருக்கும் என்றும், படத்தின் பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியும் நடிப்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து ஃபகத் பாசிலும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது. விரைவில் படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.