சினிமா

மீண்டும் தொடங்கிய காலா, மெர்சல் படப்பிடிப்புகள்

மீண்டும் தொடங்கிய காலா, மெர்சல் படப்பிடிப்புகள்

webteam

ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது.

சென்னை பூந்தமல்லி அருகே, ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதேபோல், விஜய்யின் மெர்சல், சசிகுமாரின் கொடி வீரன், விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படப்பிடிப்புகளும் இன்று நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் - ஃபெப்சி தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என ரஜினிகாந்த் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.