கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகன் யாஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.
இதனை தொடர்ந்து இப்படத்தில் தற்போது பாலிவுட் நடிகை ரவீனா டேண்டன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த செய்தியை படத்தின் இயக்குனர் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில் ரவீனா டேண்டனை வரவேற்பதில் மகிழ்ச்சி என்றும் படத்தில் வரும் ராமிகா சென் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார். மேலும் இதில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் நடிகர் அனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.