தெலுங்கு நடிகையாக இருந்தாலும், ’இன்கேம் இன்கேம்’ பாடல்மூலம் தமிழ்நாட்டிலும் மிகவும் பரிட்சயமானவர் நடிகை ராஷ்மிகா. அவரது நடிப்பாலும், க்யூட் எக்ஸ்பிரஷன்களாலும் தென் இந்தியா முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
நேற்று தனது ரசிகர்களுடன் டிவிட்டர் பக்கத்தில் லைவில் வந்த ராஷ்மிகா, அவர்கள் கேட்ட ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், ஊரடங்கில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறார், தனது பள்ளி அனுபவம், மன அழுத்தத்தை கையாளுவது எப்படி என்பதுபோன்ற பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அனைத்துக் கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளித்தார். சினிமா பற்றி கூறுகையில், ’’கேமரா முன்பு நிற்பது தினமும் தேர்வு எழுதுவதற்கு சமம். வேலையில் சிரமம் இருந்தாலும், ஒரு திரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு சீன் முடிந்தவுடன் மொத்த குழுவிடம் இருந்தும் கைத்தட்டுகளையும், பாராட்டுகளையும் வாங்கும்போது ஆனந்தமாக இருக்கும். திரும்ப வேலைக்குச் செல்ல ஆவலாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: ஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..!