ரன்வீர் சிங் நடிப்பில் இரு பாகங்களாக வெளியான ‘துரந்தர்’ 3000 கோடிக்கு மேல் வசூலித்த வெற்றிக்குப் பிறகு, அவர் நடிக்கும் அடுத்த படம் ‘Pralay’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹன்சல் மெஹ்தாவின் மகன் ஜெய் மேத்தா இயக்கும் இந்த post-apocalyptic zombie survival thriller படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் பாலிவுட் அறிமுகமாகிறார். மும்பை ரியல் லொக்கேஷன்களில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ரன்வீரின் புதிய தோற்றம் மற்றும் ஃபேன் மேட் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
ரன்வீர் சிங் நடிப்பில் இரு பாகங்களாக வெளியாகி 3000 கோடிக்கு மேல் வசூலித்தது `துரந்தர்'. இந்தப் படத்துக்கு பிறகு ரன்வீர் என்ன படத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு சினிமா உலகில் இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அந்தப் படம் தான் Pralay.
பிரபல பாலிவுட் இயக்குநரான ஹன்சல் மெஹ்தாவின் மகன் ஜெய் மேத்தா இப்படத்தை இயக்குகிறார். ரன்வீர் சிங்குடன் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது பாலிவுட் அறிமுகமாகவும் அமைகிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. மும்பையில் ரியல் லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்துவதன் மூலம் கதையை இயல்பான தன்மையுடன் கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகிறது.
Pralay’ படத்திற்காக ரன்வீர் சிங் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் ரன்வீர் புதிய தோற்றத்தில் களமிறங்கியிருப்பதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, ‘Pralay’ படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தப் படம் post-apocalyptic zombie survival thriller என்ற ஜானரில் உருவாகிறது என தகவல். அதாவது, உலகம் அழிவை சந்தித்த பின்னர், உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தை மையமாக வைத்த ஸோம்பி படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ரன்வீரின் முந்தைய படங்களின் வெற்றிக்குப் பிறகு, முற்றிலும் மாறுபட்ட *zombie survival thriller* கதையில் அவர் நடிப்பது ‘Pralay’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பெரிய அளவிலான ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் ஆகியவற்றின் கலவையாக இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.