சினிமா

”நாங்க காதலிக்க தொடங்கி 10 வருஷம் ஆகிருக்கு” - வதந்திகளுக்கு நறுக் பதில் கொடுத்த ரன்வீர்!

”நாங்க காதலிக்க தொடங்கி 10 வருஷம் ஆகிருக்கு” - வதந்திகளுக்கு நறுக் பதில் கொடுத்த ரன்வீர்!

JananiGovindhan

காதலித்து கரம் பிடித்த நட்சத்திர தம்பதிகள் பலரும் விவாகரத்து செய்வது, பிரிந்து வாழ்வது என தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இப்படி இருக்கையில், பாலிவுட் உலகின் முக்கிய மற்றும் ரொமாண்டிக்கான நட்சத்திர தம்பதியாக இருப்பவர் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்.

2012-ம் ஆண்டு தொடங்கி 6 ஆண்டுகளாக காதல் வாழ்க்கையில் இருந்து வந்த இந்த ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டார்கள். அது முதல் இந்த நட்சத்திர தம்பதி லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார்கள். படங்கள் தயாரிப்பது, ஒன்றாக சேர்ந்து நடிப்பது, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் அன்யோன்யமாக இருப்பது என எப்போதும் ரொமாண்டிசைஸ் செய்யாமல் இருந்ததில்லை.

அண்மையில் ஐதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்த தீபிகா படுகோனேவிற்கு திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு மும்பை சென்றிருந்தபோதும் மீண்டும் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இருப்பினும் ரன்வீர் தீபிகா ஜோடி தொடர்ந்து தங்களது சினிமா வேலையில் ஈடுபட்டு வரும் நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

இந்த நிலையில்தான் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ரன்வீர் சிங் தனக்கும் தீபிகாவுக்குமான காதல் உறவு 10 ஆண்டுகளை எட்டியிருக்கிறது என பெருமிதத்தோடு கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

அதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிங்க் நிற ஆடை அணிந்திருந்த ஃபோட்டோவை ரன்வீர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு தீபிகா முத்தத்தை குறிக்கும் ஸ்மைலிகளை இட்டு, Edible (சாப்பிடக்கூடியவை) என கமெண்ட் செய்திருந்தார். இதற்கு ரன்வீரும் கிஸ்ஸிங் ஸ்மைலி போட்டு ரிப்ளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.