பிரபுசாலமன் இயக்கும் இந்தி படத்துக்காக நடிகர் ராணா, 15 கிலோ எடை குறைந்துள்ளார்.
தமிழில், கிங், லீ, கொக்கி, மைனா, கும்கி உட்பட சில படங்களை இயக்கியவர் பிரபுசாலமன், இவர் இப்போது இந்தி படத்தை ரீமேக் செய்கிறார். ராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில் 1971-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘ஹாத்தி மேரே சாத்தி’. எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தை சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். இந்தப் படம் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில், ’நல்ல நேரம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
இந்தப் படம் இந்தியில் இப்போது மீண்டும் ரீமேக் ஆகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்காக, 15 கிலோ எடை குறைந்திருக்கிறார்.
‘பழைய படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மைய கதையை மட்டும் வைத்துக்கொண்டு முழுப் படத்தையும் மாற்றிதான் எடுக்கிறோம். தாய்லாந்தில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த வருட தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.