சினிமா

நேனே ராஜூ நேனே மந்திரி கலக்கும் ராணா

நேனே ராஜூ நேனே மந்திரி கலக்கும் ராணா

webteam

பாகுபலியில் வலிமையும், ஆக்ரோஷமும் காட்டி பல்வாள் தேவனாக நடிப்பில் மிரட்டிய ராணா டகுபதியின் அடுத்த படம் நேனே ராஜூ, நேனே மந்திரி. 

தேஜாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது.

மகேஷ் பாபு நடிப்பில் சித்ரம், ஜெயம், நிஜம், நுவ்வு நேனு என பல ஹிட் படங்களை கொடுத்த தேஜாவின் இயக்கத்தையும், திறமையையும் பாராட்டி புகழ்ந்துள்ள ராணா,. நேனே ராஜூ, நேனே மந்திரி படம் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்

இந்த படத்தில் ராணாவுடன் காஜல் அகர்வால், கேத்தரின் தெரசா, நவதீப் மற்றும் அஷூதோஷ் ராணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக  உள்ளதாக கூறுகிறது தயாரிப்பு நிறுவனம்.