சினிமா

’பெங்களூர் டேஸ்’ ரீமேக்: நடிகர் ராணா திடீர் வருத்தம்!

’பெங்களூர் டேஸ்’ ரீமேக்: நடிகர் ராணா திடீர் வருத்தம்!

webteam

துல்கர் சல்மான், நஸ்ரியா, நிவின் பாலி, பஹத்பாசில், இஷா தல்வார் உட்பட பலர் நடித்து மலையாளத்தில் ஹிட்டான படம், ’பெங்களூர் டேஸ்’. அஞ்சலி மேனன் இயக்கிய இந்தப் படம் தமிழில் ’பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, ராய் லட்சுமி, பார்வதி உட்பட பலர் நடித்திருந்தனர். ’பொம்மரிலு’ பாஸ்கர் இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழில் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கக் கூடாது என்று நடிகர் ராணா தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘நடிகர் துல்கர் சல்மான் எனது நண்பர். சிறந்த நடிகர். அவர் அதற்குள் 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார். அவருடன் எதிர்காலத்தில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். துல்கர் சல்மான் நடித்த ’பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடித்தது பற்றி கேட்கிறார்கள். அதில் நடித்திருந்தேன். அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அதுபோன்ற படங்களை ரீமேக் செய்திருக்கக் கூடாது. அதில் பஹத் பாசில் நடித்த கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டு நான் ஒப்புக்கொண்டேன்’ என்றார்.