சினிமா

புதிய தோற்றதிற்கு மாறினார் ராணா டகுபதி

புதிய தோற்றதிற்கு மாறினார் ராணா டகுபதி

webteam

புதிய தோற்றத்திற்கு மாறியிருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார்.

பாகுபலிக்குப் பிறகு ராணா டகுபதி மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அவர் பொறுமையாக தன் கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அவர் தற்போது 1945 படத்திற்காக உடல் எடையை அதிகம் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார். முகத்தில் அவ்வளவு மாற்றங்கள். குறிப்பாக தாடி இல்லை.இது குறித்து தனது ட்விட்டரில் “மற்றொரு காலகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறேன். 1945க்கான புதிய தோற்றத்தில் மாறி பணியாற்றுகிறேன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பரில் வெளியாகும்” என அறிவித்திருக்கிறார்.