பாகுபலி2 படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, ரசிகர்களுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், பாகுபலி 2. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தின் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
‘ரசிகர்கள் எல்லோருக்கும் என் அன்பு. உங்களின் ஆதரவும் அன்பும் இல்லையென்றால் இந்த இடத்துக்கு நான் வந்திருக்க முடியாது. ஜெய் மகிழ்மதி’ என்று கூறியுள்ளார். பாகுபலி2 படப்பிடிப்பில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி உட்பட, தனக்கு உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.