ramayana part 1 Prime Focus Studios/Monster Mind Creations/DNEG
சினிமா

ஒரே வாரத்தில் 100 கோடி பார்வைகள்.. சாதனை படைத்த ’ராமாயணா’ ட்ரெய்லர்!

’ராமாயணா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் 100 கோடி பார்வைகளைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்திருக்கும் ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில் சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.

ramayana part 1

இந்த நிலையில், இந்த ட்ரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாக்னில்க் இணையத்தில் பகிர்ந்த புள்ளிவிவரங்களின்படி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில், அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்ட அனைத்து ட்ரெய்லர்களும் கூட்டாக 1 பில்லியன் பார்வைகளை எட்டியுள்ளன. இந்த எண்ணிக்கையில் பெரும்பகுதி இன்ஸ்டாகிராமில் இருந்து பெறப்பட்டது. மேலும், இந்தி ட்ரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.