பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஐதராபாத்தில் திரைப்பட பயிற்சிப் பள்ளியை தொடங்கியுள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்தவர் ராம் கோபால் வர்மா. இவர் இந்தி, தெலுங்கு, தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இப்போது ஐதராபாத் தில் திரைப்படப் பயிற்சிப் பள்ளியை தொடங்கி இருக்கிறார். ஆர்ஜிவி அன் ஸ்கூல் (RGV UnSchool) என பெயரிடப்பட்டுள்ள இதில் நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங் ஆகியவைக் கற்றுக்கொடுக்கப்படும்.
நியூயார்க்கில் வசிக்கும் ஸ்வேதா ரெட்டியுடன் இணைந்து இது தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ராம் கோபால் வர்மா மற்ற திரைப்பட இன்ஸ்டிடியூட்கள் போல இது இருக்காது என்றும் இதன் பாடத்திட்டங்கள் வேறு மாதிரியானவை என்றும் தெரிவித்துள்ளார். ஐதரபாத்தை தொடர்ந்து விரைவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இதன் கிளைகள் தொடங்கப்படும் என்றும் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.