சூர்யாவின் ‘என்ஜிகே’படத்தின் படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளார்.
கடந்த ஒருமாதக் காலமாகவே தமிழ்த் திரை உலகம் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வந்தது. எனவே படப்பிடிப்பு எதுவும் நடைப்பெறவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரை உலகம் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. இதுநாள் வரை நிறுத்தப்பட்டு வந்த படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சூர்யா நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். கிராமத்து செட் அமைப்பில் ரகுல் ப்ரீத் சிங்கின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.