புதியதாக தொடங்க உள்ள ஒரு படத்தில் மீண்டும் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளி வர தொடங்கியுள்ளது.
தற்சயம் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கிறார். இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. 1995 முதல் 2005 வரையான கதைக்களம் இதில் இடம்பெறுகிறது. இப்படம் வரும் நவம்பர் 17 அன்று திரைக்கு வர உள்ளது. இதில் நாயகியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத்சிங். இந்தப் படமே இன்னும் வெளிவராத நிலையில் அதற்குள் இந்த இருவரும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர். அடுத்த வருடம் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் இயக்க இருக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையாக இதை எடுக்க அவர் தீர்மானித்துள்ளார்.
இதை பற்றி ரகுல், தீரன் அதிகாரம் ஒன்று மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளதாக நான் நினைக்கவில்லை. தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறேன்.இப்போது நான் ரொம்ப பிசி என்று கூறியிருக்கிறார்.