சினிமா

பிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

webteam

பிரபல நடிகை லட்சுமி, கர்நாடக அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக அரசு ஒவ்வொரு வருடமும் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்ய மூத்த கன்னட நடிகர் சீனிவாச மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு நடிகை லட்சுமியை தேர்வு செய்துள்ளது. . சிறந்த இயக்குனருக்கான புட்டன்ன கனகல் வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, 50 கிராம் கோல்டு மெடல், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது. 

பிரபல தமிழ் நடிகை லட்சுமி, 80-களில் ஹீரோயினாக கொடிகட்ட பறந்தவர். இவர், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 65 வயதான லட்சுமி இப்போது டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.