சினிமா

ஞானவேல் ராஜா கமலுக்கு பணம் கொடுக்கவே இல்லை - ராஜ்கமல் பிலிம்ஸ் விளக்கம்

ஞானவேல் ராஜா கமலுக்கு பணம் கொடுக்கவே இல்லை - ராஜ்கமல் பிலிம்ஸ் விளக்கம்

rajakannan

ஞானவேல் ராஜா பணம் அளித்ததாக கூறும் புகாரில் உண்மையில்லை என்று ராஜ்கமல் பிலிம்ஸ் விளக்கம் அளித்துள்ளது. 

இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உத்தம வில்லன் வெளியாக ஞானவேல் ராஜா பணம் அளித்ததாக கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது, தன்னிடம் வாங்கிய பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்து இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில், ரூ10 கோடி கொடுத்தால் படம் தயாரிக்க கால்ஷீட் தருவதாக கமல் கூறியதாக ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த நிலையில், அதுகுறித்து கமல் தரப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளது.