சினிமா

“இதுவும் கடந்து போகும் ; புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்” - ரஜினிகாந்த்

“இதுவும் கடந்து போகும் ; புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்” - ரஜினிகாந்த்

webteam

இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லோரும் கோயில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்வர். ஆனால் இந்தாண்டு ஊரடங்கு காரணமாக கோயில்களுக்கு யாரும் செல்லவில்லை. அதேசமயம் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” எனத் தெரிவித்துள்ளார்.