சினிமா

ஆஸ்கர் விருது வாங்கிய விஎஃப்எக்ஸ் மீது லைக்கா வழக்கா?

ஆஸ்கர் விருது வாங்கிய விஎஃப்எக்ஸ் மீது லைக்கா வழக்கா?

webteam

ஆஸ்கர் விருது வாங்கிய விஎஃப்எக்ஸ் நிறுவனம் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர உள்ளதாக செய்தி பரவி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.ஓ’ திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஷங்கர் அறிவித்தபடி மேக்கிங் வீடியோ வெளியானது. ஆடியோ தேதியும் அறிவித்ததை போலவே நடந்து முடிந்தது. ஆக, அறிவிப்பில் எந்த மாறுதலும் இருக்காது என நினைத்திருந்த வேலையில் ஜனவரிக்கு வெளியாகும் என கூறப்பட்ட திரைப்படம் எதிர்பாராத விதமாக ஏப்ரலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. காரணம் என்ன? என்று அலசிய ஆராய்ந்த போது படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் முடியாததே இந்தத் தாமத்திற்கு காரணம் என பட நிறுவனமே ஒப்புக்கொண்டது. 

இந்நிலையில் விஎஃப்எக்ஸ் நிறுவனம் மீது லைக்கா வழக்கு தொடர இருப்பதாக செய்தி பரவியது. ஆஸ்கர் விருது பெற்ற நிறுவனம் மீதே வழக்கா என பலரும் ஆச்சர்யப்பட்டனர். இதற்கிடையே லைக்கா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “வழக்கு தொடரப்போவதாக பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வந்தந்தி மட்டும்தான். விஎஃப்எக்ஸ் வேலைகள் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அதற்காவே இந்தத் தாமதம். படம் தள்ளிப் போவது பற்றி குறையில்லை. ஆனால் தரமாக வெளிவர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.