சினிமா

“என்ன ஒரு ஒளி? என்ன ஒரு உற்சாகம்?” - ரஜினி பற்றி டி.இமான் நெகிழ்ச்சி

“என்ன ஒரு ஒளி? என்ன ஒரு உற்சாகம்?” - ரஜினி பற்றி டி.இமான் நெகிழ்ச்சி

webteam

இயக்குனர் சிவாவுடன் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கான பூஜை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று தொடங்கியது. அதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பிடபடவில்லை என்பதால் 'தலைவர் 168' என்றே படக்குழுவினர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கு முன் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது என செய்தி வெளியாகி இருந்தாலும் என்ன படப்பிடிப்பு? என்ன காட்சிகளை எடுத்தனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இப்போது இது குறித்து தகவல் கிடைத்துள்ளது. முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷின் பாடல் காட்சிதான் முதற்கட்டமாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிந்துள்ளது. இது குறித்த விவரங்களை இசையமைப்பாளர் டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“எளிமையின் அடையாளமான மனிதர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தேன். முதல் நாள் படப்பிடிப்பின் போது அவர் பாடலை பற்றி நேர்மறையான சொற்களை பகிர்ந்து கொண்டார். அவை ஊக்கமளித்தன. என்ன ஒரு ஒளி? என்ன ஒரு உற்சாகம்? இந்த மனிதர் தன்னை சுற்றி உள்ள உலகத்திற்கு ஒரு ஆற்றலை வழங்குகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், நடிகர் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.