சினிமா

பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த்: ஒளிபரப்பு தேதியை வெளியிட்ட தொலைக்காட்சி

webteam
டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்ற தகவலை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். இவருடன் இந்திய பிரதமர் மோடி காட்டுக்குள் பயணம் செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒரு கோடிக்கும் அதிகமானோர் தொலைக்காட்சியில் பார்த்தனர். 
இந்நிலையில் Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில்  பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது தொடர்பானஅறிவிப்பை டிஸ்கவரி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.