ரஜினி நடிக்கும் 164 வது படமான ’காலா’ படத்தை இயக்குகிறார் ப.ரஞ்சித். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு இன்று மும்பை தாராவி பகுதியில் தொடங்கியது. காலா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கபாலி படத்தில் வரும் ரஜினியின் தோற்றும் இதிலும் பிரதிபலிக்கிறது. திருநெல்வேலியின் இருந்து மும்பை சென்று அங்கு தமிழ் மக்களுக்கு பாதுகாவலாராக இருந்த ஒருவரின் கதையே காலா படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. இந்தப்டத்தை ரஜினியின் மருமகன் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வெளியாகும் முன் காலா படப்பிடிப்பின் பங்கேற்றுள்ளார் ரஜினி.