2.ஓ இசை விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் இருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயிலுள்ள புர்ஜ் பாக்கில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவுக்காக மட்டும் தயாரிப்பு தரப்பில் 12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விழாவில் எமி ஜாக்சன், மைக்கேல் சிங்கோ ஸ்டைலில் உடை அணிந்து வந்து அசத்தினார். அதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் பெரும் பணம் செலவிடப்பட்டிருந்தது. அங்கே மிக எளிமையாக வந்தவர் ஒருவர் மட்டும்தான். அவர் வேறு யாருமில்லை, ரஜினிகாந்த். அவருடன் இரண்டு ஸ்பெஷல் கெஸ்ட்ஸ் கலந்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் ரஜினியின் உறவினர்கள். ரொம்ப சுற்றி வளைக்க வேண்டாம். விஷயத்தை விளக்கி விடுகிறோம். நடிகர் தனுஷின் மகன்களான யாத்ராவும், லிங்காவும்தான். தாத்தா ரஜினியுடன் அவர்கள் இருவரும் மேடையில் மிக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த காட்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.