சினிமா

வெளியானது ‘தர்பார்’... கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்..!

Rasus

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாகவும், சுனில் ஷெட்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இதில் ரஜினிகாந்த் மும்பை காவல் ஆணையராக தோன்றுகிறார். பணமிருந்தால் சிறைக்கைதிகூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனமும் தர்பார் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 7ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படம் வெளியாகாத நாடுகளிலும் தர்பார் படம் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 4 ஆயிரம் திரை அரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகளை திரையிட மாநில அரசு அனுமதி வழங்கியதால், திரை அரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. சிறப்பு காட்சியை பார்த்த ரசிகர்கள் கூறும்போது, படத்தில் ரஜினியின் கெட்டப் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தனர். சென்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக இருந்ததாகவும், ரஜினிக்கே உரிய மாஸ் இந்தப் படத்திலும் நச்சென இருந்ததாக தெரிவித்தனர்.