சினிமா

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை ’ ரஜினிகாந்த்

‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை ’ ரஜினிகாந்த்

EllusamyKarthik

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 

நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். 

இதற்கான காமன் டிபி மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் தனக்கு வாழ்த்த தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

‘என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹாஷ்டேக்குடன்’ விட்டரில் பகிர்ந்துள்ளார் அவர்.