Rajinikanth
Rajinikanth pt desk
சினிமா

விஜயவாடாவில் NTR-ன் நூற்றாண்டு விழா: ரஜினிக்கு உற்சாக வரவேற்பளித்த பாலைய்யா!

Kaleel Rahman

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் நூறாவது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுளையும் என்டிஆர் குடும்பத்தினர் முழு வீச்சில் செய்து வருகின்றனர். இன்று விஜயவாடாவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில், அவருடைய பேரன்களில் ஒருவரான பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Balakrishna

இந்நிலையில், தன்னுடைய தந்தையின் நூறாவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரடியாக செய்துவரும் பாலகிருஷ்ணா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி உட்பட பல திரையுலக பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் விஜயவாடா அருகே உள்ள கண்ணவரம் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை பாலகிருஷ்ணா உட்பட என்டிஆர் குடும்பத்தினர் வரவேற்றனர்.

rajinikanth

என்டிஆரின் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருடைய பேரன்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.