சினிமா

ரஜினியின் 2.ஓ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

ரஜினியின் 2.ஓ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

webteam

ரஜினிகாந்தின் ’2.ஓ’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது ஏன் என்பது பற்றி படத்தை தயாரித்துள்ள லைகா புரொடக்‌ஷன்ஸின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’2.ஓ’. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

சுமார் 450 கோடி ரூபாயில் உருவாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது.

இதுபற்றி லைகாவின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கத்திடம் கேட்டபோது, ’உலகத்தரமான கிராபிக்ஸ் வேலைகள் நடந்துவருகிறது. அமெரிக்காவில் நடைபெறும் இந்த பணி முடிய அதிக நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 25-ம் தேதிக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இந்தக் காட்சிகள் பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும்’ என்றார்.