சினிமா

அப்போலோ மருத்துவர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

அப்போலோ மருத்துவர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

sharpana

சமீபத்தில் ஹைதராபாத் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் ’அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் ஹைதராபாத்தில் கலந்துகொண்டார். கடந்த வாரம் யூனிட்டில் உள்ளோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நெகட்டிவ் என்று வந்தாலும் ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை சரியானதும் டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்நிலையில், தான் அனுமதிக்கப்பட்ட அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் “கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது” என்று கூறியதோடு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.