சினிமா

பதவிக்கு தகுதியானவர்: வெங்கய்ய நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து

பதவிக்கு தகுதியானவர்: வெங்கய்ய நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து

webteam

துணைக்குடியரசுத் தலைவராக வெற்றிபெற்றுள்ள பஜக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ’எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். வெங்கையா நாயுடு, மிகவும் கவுரமான இந்த பதவிக்கு தகுதி பெற்றவர் நீங்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என கூறியுள்ளார்.