சினிமா

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு ரஜினி டைட்டில் ஏன்?

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு ரஜினி டைட்டில் ஏன்?

webteam

ரஜினிகாந்த் நடித்து 1979-ல் வெளியான படம், ’குப்பத்து ராஜா’. இந்த டைட்டிலில் இப்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்குகிறார். எஸ் போக்கஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன், எம்.சிராஜ் மற்றும் டி. சரவணன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி நடிக்கின்றனர். மற்றும் பார்த்திபன், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, 'ஜாங்கிரி' மதுமிதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்துக்கு ஏன் ரஜினி பட டைட்டில் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது, 'குப்பத்து ராஜா' கதையை, பாபா பாஸ்கர் சொன்னதும் ஆச்சிரியப்பட்டோம். டான்ஸ் மாஸ்டரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறார் என்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை கவர்ந்தது. இக்கதைக்கு சரியாக பொருந்துவதால் ரஜினியின் 'குப்பத்து ராஜா' டைட்டிலை தேர்ந்தெடுத்தோம்’ என்றனர்.  தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது.