சினிமா

ரஜினி தலைப்பைக் கைப்பற்றினார் மா.கா.பா. ஆனந்த்

ரஜினி தலைப்பைக் கைப்பற்றினார் மா.கா.பா. ஆனந்த்

webteam

மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள படம் ‘மாணிக்’.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஷால் வெளியிட்டிருக்கிறார்.

சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வருபவர் மா.கா.பா.ஆனந்த். இவர் ஹீரோவாக நடித்துள்ள 
படம் ‘மாணிக்.’ இவருக்கு ஜோடியாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் நடித்திருக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். 

இப்படத்தின் மூலம் மார்டின் என்னும் புதுமுக இயக்குநர் அறிமுகமாகிறார். இவர் இயக்கியுள்ள பல குறும்படங்கள் பல்வேறு விருது 
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது. மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இப்படம் ஃபேண்டசி 
கலந்த காமெடிப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் டிசைன்கள் பாட்ஷா ரஜினிகாந்த் கெட் அப்பில் வெளியாகியுள்ளன. அதோடு ‘மாணிக்’என்பது ரஜினியின் ‘மாணிக் பாஷா’வை நினைவுப்படுத்துவதாக உள்ளது. 

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷால் இக் குழுவினரை வாழ்த்தியுள்ளார். இந்நிகழ்வின் போது ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், 
தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமார், எடிட்டர் கே.எம்.ரியாஸ், இணை இயக்குநர் மணி ஆகியோர் உடன் 
இருந்தனர். இதையடுத்து விரைவில் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு.