ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் அமெரிக்காவின் ஃபெண்டாஸ்டிக் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
22 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படம், டிஜிட்டலில் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்நிலையில், தற்போதும் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் இந்தாண்டின் துவக்கத்தில் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தொடர்ந்து அமெரிக்க திரைப்பட விழாவில் வரும் 24, 26 ஆகிய தேதிகளில் பாட்ஷா திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் ஆளவந்தான் கடந்தாண்டு திரையிடப்பட்டது.