சினிமா

ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ வெளியீடு!

ரஜினியின் 2.0 பட மேக்கிங் வீடியோ வெளியீடு!

webteam

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் போன்ற பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0 அதிக பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் பற்றிய தகவல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்து இருந்தார். அதன் படி இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2.0 படத்தின் 1.46 நிமிடங்கள் கொண்ட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.