சினிமா

டிரண்டாகும் 'அன்றே சொன்ன ரஜினி' ஹேஷ்டேக்

டிரண்டாகும் 'அன்றே சொன்ன ரஜினி' ஹேஷ்டேக்

webteam

சமூக வலைதளங்களில் 'அன்றே சொன்ன ரஜினி' என்ற ஹேஷ்டேக் ஒரு லட்சத்துக்கும் மேலான ட்விட்டுகளைப் பெற்று டிரண்டாகி வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த நடிகர் ர‌ஜினிகாந்த், புனிதமான இப்போராட்டம் சில சமூக விரோதிகளால் வன்முறையாக மாறியதாக கூறியிருந்தார். சமூக விரோதிகள் என குறிப்பிட்ட ரஜினியின் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் அப்பகுதி மக்கள் ஓர் அமைப்பை குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாகவும் வன்முறைக்கு அவர்களே காரணம் என்‌றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். சமூக விரோதிகள் என ரஜினி குறிப்பிட்டது இப்போது தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அவரது ரசிகர்கள் 'அன்றே சொன்ன ரஜினி' என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இந்த ஹாஷ்டேக் ஒரு லட்சத்துக்கும் மேலான ட்வீட்டுகளை பெற்று டிரண்டாகி வருகிறது.